ADDED : செப் 28, 2026 06:32 AM
கரூர்:சேலம்
மாவட்டம், காடையாம்பட்டி ராமா கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர்
வேலப்பன், 45; திருமணம் ஆனவர். இவர், கரூர் க.பரமத்தி பசுபதிபாளையம்
பகுதியில், தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.
கடந்த, 23ல்
பசுபதிபாளையம் சிபி நகரில் கட்டட வேலை செய்து கொண்டிருந்த
இடத்தில் இருந்து, டீ குடிக்க சென்ற வேலப்பன், திரும்பி வரவில்லை.
இதுகுறித்து, வேலப்பனின் மனைவி ரேகா, 35, அளித்த புகார்படி, க.பரமத்தி
போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்
மேட்டு திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 60; இவர்
கடந்த, 23ல் க.பரமத்தி அருகே சாலப்பாளையம் ஜெயந்தி நகரில் உள்ள மகள்
வீட்டுக்கு சென்றுள்ளார்.
ஆனால், திரும்பி வரவில்லை.
உறவினர்களின் வீடுகளுக்கும் பழனிசாமி செல்லவில்லை. இதுகுறித்து,
பழனிசாமியின் மனைவி அகிலாம்மாள், 50, அளித்த புகார்படி, க.பரமத்தி
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
