/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
/
மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
ADDED : ஏப் 25, 2025 01:27 AM
கரூர்:
மருந்தாளுனர் பணியிடங்களுக்கு, போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து, கலெக்டர் தங்க வேல் வெளியிட்ட அறிக்கை: கரூர், வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், மருந்தாளுனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படும்.
இங்கு ஸ்மார்ட் போர்டு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், வாராந்திர தேர்வு, இணைய வழித்தேர்வு (online test), முழு மாதிரி தேர்வு, மென்பாடக்குறிப்புகள் எடுத்துக்கொள்ள, இணையதளத்துடன் கூடிய கணினி வசதியுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், இன்று (25ம் தேதி) நேரடியாகவோ அல்லது 94990-55912 என்ற மொபைல் எண் வாயிலாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.