/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அரசியல் ஒற்றன்' வார இதழ் நிருபர் மீது கும்பல் தாக்குதல்
/
'அரசியல் ஒற்றன்' வார இதழ் நிருபர் மீது கும்பல் தாக்குதல்
'அரசியல் ஒற்றன்' வார இதழ் நிருபர் மீது கும்பல் தாக்குதல்
'அரசியல் ஒற்றன்' வார இதழ் நிருபர் மீது கும்பல் தாக்குதல்
ADDED : மார் 12, 2024 04:09 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூரில், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே வசிப்பவர் பிரகாஷ் குமார், 38; தினபூமி நாளிதழ், அரசியல் ஒற்றன் வார இதழ் நிருபராக உள்ளார்.
மேட்டூர் நகராட்சி நெடுஞ்சாலை இருபுறமும் கடை ஆக்ரமிப்புகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, தனி நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது.
இதுகுறித்து பிரகாஷ்குமார் அரசியல் ஒற்றன் வார இதழில் செய்தி வெளியிட்டார். இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் ஆக்ரமிப்புகளை அகற்றியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் சதுரங்காடி அருகில் ஒரு டீக்கடையில், பிரகாஷ்குமார் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த நான்கு பேர் கும்பல், அவரை கடையின் பின்பக்கம் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.
பிறகு அவரை காரில் ஏற்றி சென்றுள்ளனர். கார் ஒரு இடத்தில் நின்ற போது அவர்களிடம் இருந்து தப்பிய பிரகாஷ்குமார், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தி.மு.க.,வை சேர்ந்த ஜீவா, பிரபு, சிவா, பிரான்சிஸ் ஆகியோர் தன்னை தாக்கியதாக, மேட்டூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

