/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கும்பல் கைது
/
ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கும்பல் கைது
ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கும்பல் கைது
ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கும்பல் கைது
ADDED : ஜூன் 16, 2025 03:18 AM
கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, ஐ.டி., கம்பெனி ஊழியர் வீட்டில் தங்க நகைகளை திருடிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், நாணப்பரப்பு பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ், 36; கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஐ.டி., கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே, 26ம் தேதி சேலத்தில் உள்ள மனைவி பிரியாவை பார்க்க சென்றார். பின் கடந்த, 1ல் வீட்டுக்கு வந்தார். வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த, ஒன்பது பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகாரளித்தார்.இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார், தங்க நகைகளை திருடிய சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கார்த்திக், 22, விஜய், 26, அபிமன்யு, 22, ஆகியோரை கைது செய்தனர். மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட, ஒரு பஜாஜ் பல்சர் பைக்கையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும், சேலம், தர்மபுரி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீசார் தெரிவித்தனர்.
கரூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.