/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி பள்ளி முன் குப்பை மாணவ, மாணவியர் அவதி
/
மாநகராட்சி பள்ளி முன் குப்பை மாணவ, மாணவியர் அவதி
ADDED : அக் 01, 2024 01:27 AM
மாநகராட்சி பள்ளி முன் குப்பை
மாணவ, மாணவியர் அவதி
கரூர், அக். 1-
கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகில், அந்த பகுதியை சேர்ந்த ஓட்டல் கடைகள், டீ கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து கொண்டு வந்து குப்பையை கொட்டி செல்கின்றனர்.
மேலும், மாநகராட்சி தரப்பில் வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், பல மணி நேரம் வண்டியில் வைத்து பள்ளி முன் நிறுத்தப்படுகிறது. மலைபோல் குப்பைகளுக்கு நடுவில், சில வேன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கும், பள்ளி நுழைவு வாயிலை மறைத்து பல மணி நேரம் நிறுத்தப்படுகிறது. குப்பையால் ஏற்படும் பிரச்சனைகள், நோய்கள் மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து நாடகம், கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழக அரசும், துாய்மை இந்தியா திட்டத்தில், மத்திய அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், கரூர் மாநகராட்சி குமரன் உயர் நிலைப்பள்ளி முன், குப்பை மேடு உருவாகி வருகிறது. இதனால், மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க, குப்பை கொட்டுவோர் மற்றும் வாகனங்களை பள்ளிக்கு முன்னால் நிறுத்த தடை விதிக்க வேண்டும், மீறுவோர் மீது, கரூர் மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.