/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் தேங்கிய குப்பை தொற்று நோய் அபாயம்
/
சாலையில் தேங்கிய குப்பை தொற்று நோய் அபாயம்
ADDED : அக் 21, 2024 07:35 AM
கரூர்: கரூர் காசிம் தெரு, இரட்டை வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள சாக்கடை வாய்க்காலில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ளது. மேலும், தினசரி மார்க்கெட் சாலையில் பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தும் பயனில்லை. கரூர் நகரில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், குப்பை அழுகி துர்நாற்றம் வீசுகிறது.
இந்நிலையில், கரூர் காசிம் தெரு பகுதியில் தேங்கிய குப்பையால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குப்பையை அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.