ADDED : செப் 03, 2026 06:10 AM
கரூர்:உலக
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடந்த போட்டியில், வெற்றி
பெற்றவர்களுக்கு புகழூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் பரிசு
வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலை நிறுவனம்
சார்பில், 11 அரசு பள்ளிகளில், சுற்றுச்சூழல் தினத்தையொட்டி,
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பு பற்றிய கட்டுரை
போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி நடந்தது.
அதில், 500க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இறுதி சுற்றில் வெற்றி பெற்ற,
168 மாணவ, மாணவியருக்கு புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், காகித ஆலை முதன்மை பொது மேலாளர்கள்
கலைசெல்வன், சிவக்குமார், வெங்கடேஷன், துணை மேலாளர் சக்திவேல்,
உயர்கல்வி வழிகாட்சி ஆசிரியர் குப்புசாமி, ஆசிரியை பூரணி உள்பட பலர்
பங்கேற்றனர்.
