ADDED : ஜன 06, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த தொண்டமாங்கினம் பஞ்., பெருமாள்கவுண்-டன்பட்டியை சேர்ந்தவர்
சக்திவேல், 36; கண்ணியம்மாள், 33, தம்பதியர். இவர்களது மகள் ஜீவிதா, 9. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் அனைவரும் துாங்கினர். அதிகாலை எழுந்து பார்த்த-போது, மகள் ஜீவிதாவை காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடிப்பார்த்தும் எந்த
தகவலும் கிடைக்கவில்லை. தந்தை சக்திவேல் கொடுத்த புகார்-படி, தோகைமலை போலீசார்
சிறுமியை தேடி வருகின்றனர்.