/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்: கலெக்டர்
/
பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்: கலெக்டர்
ADDED : அக் 19, 2024 01:03 AM
பெண் குழந்தைகளை படிக்க
வைக்க வேண்டும்: கலெக்டர்
கரூர், அக். 19-
''பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும்,'' என, கலெக்டர் தங்கவேல் பேசினார்.
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராவது குறித்த விழிப்புணர்வு முகாம், கரூரில் நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
பெண்கள் பாதுகாப்புக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனை, வங்கியில் செலுத்தி வருகின்றனர்.
மேலும், தமிழக அரசு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதில், உறுப்பினராகி தமிழக அரசின் திட்டங்களை பெண்கள் பெற வேண்டும். பெண் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும். அவர்களின் உயர்க்கல்விக்கும், அரசு கடன்களை வழங்கி வருகிறது.
இவ்வாறு பேசினார்.
நீதிபதி பரத்குமார், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் பார்வதி, முன்னோடி வங்கி அலுவலர் வசந்தகுமார், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயப்பிரதா, தொழில் மைய மேலாளர் ரமேஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.

