/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டில்லியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி; 1 லட்சம் பார்வையாளர் வருவர் என எதிர்பார்ப்பு
/
டில்லியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி; 1 லட்சம் பார்வையாளர் வருவர் என எதிர்பார்ப்பு
டில்லியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி; 1 லட்சம் பார்வையாளர் வருவர் என எதிர்பார்ப்பு
டில்லியில் உலகளாவிய ஜவுளி கண்காட்சி; 1 லட்சம் பார்வையாளர் வருவர் என எதிர்பார்ப்பு
ADDED : அக் 23, 2024 07:24 AM
கரூர்: ''டில்லியில் நடக்கும், உலகளாவிய ஜவுளி கண்காட்சியில், ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவர்,'' என, கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூரில், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், 'ரோட்ஷோ' என்ற பெயரிலான கருத்தரங்கம் நடந்தது. கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் செயல் இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பின்னர், கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவரும், கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முன்னாள் தலைவருமான கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில், 2025 பிப்., 14- முதல் 17 -வரை, 'பாரத் டெக்ஸ்-2025' என்ற உலகளாவிய ஜவுளி கண்காட்சி டில்லியில் நடக்கிறது. இதில், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியாளர்கள், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ், பேஷன்ஸ், பேப்ரிக்ஸ் மற்றும் யார்ன்ஸ் பைபர்ஸ் என, 3,500 பேர் தங்களது உற்பத்தியை காட்சிப்படுத்த உள்ளனர். இதில், 6,000 வெளிநாட்டு நுகர்வோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியை பார்வையிட, ஒரு லட்சம் பேர் வருவர் என கணிக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் நம் தொழில்நுட்பத்துடன் கூடிய, ஜவுளி பொருள்களை காட்சிப்படுத்தும்போது எளிதில் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை பெற முடியும். நம் நாட்டின் ஜவுளி வர்த்தகத்தை, 2030-க்குள், 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எய்திட கண்காட்சி கைகொடுக்கும். இவ்வாறு கூறினார்.