/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
/
சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
ADDED : பிப் 23, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது. நேற்று ஆடு, கோழிகளுடன் காய்கறி விற்பனையும்நடந்தது.
நேற்று கூடிய சந்தையில் தலா ஒரு ஆடு, 6,500 ரூபாய்க்கு விற்றது. நாட்டு கோழி கிலோ, 450 ரூபாயில் இருந்து விலை உயர்ந்து கிலோ, 550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டு கோழி வரத்து சரிவு காரணமாக விலை உயர்ந்தது. மேலும், கிராமங்களில் விழா காலம் துவங்கியுள்ளதால், கோழிகள் விலை உயர்ந்துள்ளது. ஆடு, கோழிகளை வாங்க கரூர், குளித்தலை, தோகைமலை, லாலாப்பேட்டை, புலியூர், பஞ்சப்பட்டி, சேங்கல் பகுதி வியாபாரிகள் வந்திருந்தனர்.