/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வே.பாளையத்தில் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகை திருட்டு

ADDED : செப் 10, 2025 01:30 AM
கரூர், வேலாயுதம்பாளையத்தில், பூட்டியிருந்த டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், 45; மண்மங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர். இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி, 38; கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ
மனையில் டாக்டராக உள்ளார்.
இருவரும் கடந்த, 6ல் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்றனர். நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 34 பவுன் தங்க நகை, 10.5 பவுன் வைர நகை மற்றும் ஒரு லட்சத்து, 5,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. பிரபாகரன் அளித்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.