ADDED : ஆக 01, 2026 06:45 AM
குளித்தலை: குளித்தலை
அடுத்த கீழப்பகுதி நவக்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 56;
கொத்தனார். இவரும், இவரது மனைவியும், சென்னைக்கு கொத்தனார் வேலைக்கு
சென்றனர்.
பின், பூர்வீக ஊரான நவகுளத்தில் உள்ள புதிய வீட்டிற்கு
குடும்பத்துடன், கடந்த, 27ல் வந்தனர். மறுநாள், 28ல் மீண்டும் சென்னை
திரும்பினர். இந்நிலையில், 30 காலை, 9:00 மணிக்கு, வீட்டின் கதவு
உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.உடனடியாக,
சென்னையில் இருந்து கிராமத்திற்கு வந்த தங்கவேல், வீட்டிற்குள்
சென்று பார்த்தபோது, பீரோ கதவு உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த,
ஐந்து பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது
தெரிந்து அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து தங்கவேல் கொடுத்த
புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
