தரமற்ற எண்ணெயில் பலகாரம் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை
தரமற்ற எண்ணெயில் பலகாரம் ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 01, 2026 06:44 AM

குளித்தலை:குளித்தலை,
தோகைமலையில் தரமற்ற எண்ணெயில் பலகாரம் விற்பனை செய்வதை
கண்காணித்து நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்
மாவட்டம், குளித்தலை, தோகைமலை, அய்யர்மலை, நச்சலுார்,
காவல்காரன்பட்டி, நல்லுார், கழுகர், கொசூர் உள்ளிட்ட பகுதிகளில்
பலகார கடை, பேக்கரி, டீக்கடைகளில் தரமற்ற எண்ணெய் மூலம்
பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்து
வருகின்றனர்.
தொடர்ந்து அதே எண்ணெயை பயன்படுத்தி, பலமுறை
பலகாரங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதால், இதை
சாப்பிடும் குழந்தைகள் முதல் முதியோர் வரை பல்வேறு நோய்களுக்கு
ஆளாகின்றனர். தரமற்ற முறையில் பலகாரம் தயாரிக்கும் கடைகளில் ஆய்வு
செய்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் உடல்
உபாதைகளுக்கு ஆளாகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என,
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
