/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் சாவு
/
சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் சாவு
ADDED : அக் 22, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டம், புலியூர் உப்பிடமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 48; அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த, 20 அதிகாலை, பஜாஜ் டிஸ்கவர் பைக்கில், தான்தோன்றிமலை மில் கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த, தடுப்பு சுவர் மீது மோதியது. அதில், தலையில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சதீஷ்குமாரின் மனைவி சிந்துஜா, 35, கொடுத்த புகாரின்படி, தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.