/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 07, 2025 01:16 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லுாரி ஆசிரியர் கழகத்தின் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், கரூர் கிளை சார்பில், அரசு கலை கல்லுாரி வளாகத்தில், கிளை தலைவர் பிரபாகரன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பேராசிரியர் பணி மேம்பாட்டை விரைந்து வழங்க வேண்டும், பேராசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை, நேர்மையான முறையில் நட த்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கிளை செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட, கல்லுாரி பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
* குளித்தலை, அரசு கலைக்கல்லுாரி அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக, குளித்தலை கிளை தலைவர் பேராசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். கோரிக்கைகள் குறித்து கிளை செயலர் அன்பரசு பேசினார். ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் உமாதேவி நன்றி கூறினார்.