ADDED : நவ 18, 2024 03:42 AM
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்டத்தின், 13வது மாநாடு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், அரசு ஊழியர் சங்க கட்டடத்தில், நேற்று நடந்தது. அதில், புதிய ஓய்வூ-திய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்-டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பை அனுமதிக்க வேண்டும்.
காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும். அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு விசாகா கமிட்டி செயல்படுத்த வேண்டும். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, மகளிருக்கு தனியாக பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.மாவட்ட மாநாட்டில், மாநில துணைத்தலைவர்கள் செல்வராணி, பெரியசாமி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், பொரு-ளாளர் பாலசுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர் கோபி உள்பட, பலர் பங்கேற்றனர்.