/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : நவ 11, 2024 07:49 AM
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமையில், கரூரில் தனியார் ஓட்டலில், நேற்று நடந்தது. அதில், தமிழக முதல்வர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை தீர்க்காவிட்டால், வரும் டிச., முழுவதும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத்தவது; நாளை அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் இருந்து, ஊழியர்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்துவது; வரும் ஜன., 25ல் மாவட்டங்களில் கோரிக்கை மாநாடு நடத்துவது; வரும் பிப்., 20ல் ஒருநாள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டத்தை மிக தீவிரமாக நடத்துவது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.