ADDED : ஆக 28, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில், நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், நிர்வாக பணியிடங்களை பாதுகாக்க வேண்டும், களஞ்சியம் செயலியை பதிவிறக்கம் செய்யக்கூடாது, அலுவலகத்துக்கு அளித்துள்ள மொபைல் போன் சிம் கார்டை, பட்டன் மொபைல் போனுக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் தனலட்சுமி, விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் சிங்கராயர் உள்பட பலர் பங்கேற்றனர்.