/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியில் இரண்டு பஞ்.,களை இணைப்பதாக அரசு ஆணை வெளியீடு
/
கரூர் மாநகராட்சியில் இரண்டு பஞ்.,களை இணைப்பதாக அரசு ஆணை வெளியீடு
கரூர் மாநகராட்சியில் இரண்டு பஞ்.,களை இணைப்பதாக அரசு ஆணை வெளியீடு
கரூர் மாநகராட்சியில் இரண்டு பஞ்.,களை இணைப்பதாக அரசு ஆணை வெளியீடு
ADDED : ஜன 02, 2025 07:32 AM
கரூர்: கரூர் மாநகராட்சியில், இரண்டு பஞ்சாயத்துகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்படுவதாக உத்தேச அரசு ஆணை வெளியி-டப்பட்டுள்ளது.
கரூர், 1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2011-ல் கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி பஞ்., ஆகியவை இணைக்கப்பட்டன. கரூர் நக-ராட்சியில் இருந்த வார்டுகளின் எண்ணிக்கை, 36-லிருந்து 48 ஆக உயர்ந்தது. இதையடுத்து, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, கரூர் நகராட்சி மாநகராட்சி-யாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்-குறுதி அளித்தார். 2021ல் கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்பின் கரூர் மாநகராட்சியுடன் புலியூர் டவுன் பஞ்., ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, காதப்பாறை, ஆத்துார், பூலாம்பாளையம், பஞ்சமா-தேவி, மின்னாம்பள்ளி, ஏமூர், மேலப்பாளையம், கருப்பம்பா-ளையம் பஞ்., திருமாநிலையூர் பகுதி ஆகியவற்றை இணைப்பது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.இதில், ஏமூர், மேலப்பாளையம், மின்னாம்பள்ளி ஆகிய பஞ்.,கள், புலியூர் டவுன் பஞ்., தவிர்த்து மற்ற பகுதிகளை கரூர் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டதாக, கடந்த செப்., மாதம் வெளியான கருத்துருவில் தெரிவிக்கப்பட்டு இருந்-தது. இந்நிலையில், கரூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்ய உத்-தேச முடிவு என, அரசு ஆணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆண்டாங்கோயில் கிழக்கு, ஏமூர் ஆகிய இரண்டு பஞ்சா-யத்துகளில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. கருர் மாநகராட்-சிக்கு இணையாக வளர்ந்து வருகின்றன. மாநகராட்சி இணைக்-கப்படுவதால், அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள் அனைத்தும், இப்பகுதிகளுக்கு கிடைக்கும். மேலும் புதிய தொழிற்சாலை, வேலை வாய்ப்பு போன்ற வளர்ச்சிக்கு மாநக-ராட்சி இணைப்பதால் ஏற்படும். இந்த இரண்டு பஞ்.,களில், 72.62 ச.கி.மீ., துாரம் இணைப்பதால் கரூர் மாநகராட்சிக்கு ஆண்டு வருமானம், 83.57 கோடி ரூபாய் உயரும் என தெரிவிக்-கப்பட்டுள்ளது.ஏற்கனவே விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட ஆண்டாங்கோவில் மேற்கு, காதப்பாறை, ஆத்துார், பூலாம்பாளையம், பஞ்சமாதேவி ஆகிய பஞ்., கைவிடப்பட்டுள்ளது. இதுபோல, தரம் உயர்த்தப்-பட்ட பள்ளப்பட்டி நகராட்சியில், லிங்கமநாயக்கன்பட்டி பஞ்., இணைக்கப்படுவதாக அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்-ளது.