/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட நீச்சல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
/
கரூர் மாவட்ட நீச்சல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
கரூர் மாவட்ட நீச்சல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
கரூர் மாவட்ட நீச்சல் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : டிச 09, 2025 05:02 AM
கரூர்: கரூர் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கரூர் அருகே, வாங்கல் அரசு மேல்நிலை பள்-ளியில், நீச்சல் போட்டியில் வெற்றி மாணவர்க-ளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை வகித்தார். கடந்த, 2ல், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நீச்சல் போட்டி நடந்தது.இப்பள்ளியின், பிளஸ் 2 மாணவர் அருண்குமார், 19 வயதுக்குட்பட்ட பிரிவில், மூன்று தங்க பதக்கம், பிளஸ் 1 மாணவர் பிரனேஷ், தங்க பதக்கம், பிளஸ் 1 மாணவர் யுவராஜ், வெள்ளி, வெண்கல பதக்கம், 9ம் வகுப்பு மாணவர் மணி-கண்டன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் வெள்ளி, வெண்கல பதக்கம், 9ம் வகுப்பு மாணவர் விஷால், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கம் வென்றனர்.
இவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கப்பட்டது.