/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இயற்கை வேளாண் பண்ணைக்கு அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா
/
இயற்கை வேளாண் பண்ணைக்கு அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா
இயற்கை வேளாண் பண்ணைக்கு அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா
இயற்கை வேளாண் பண்ணைக்கு அரசு பள்ளி மாணவர்கள் சுற்றுலா
ADDED : செப் 04, 2025 01:31 AM
கரூர் கரூர் வட்டார வேளாண்மை துறை மூலம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில், பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இதில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், இயற்கை வேளாண்மை என்ற தலைப்பின் கீழ், மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்
நிலைப்பள்ளியை சேர்ந்த, 100 மாணவியரை கடவூரில் உள்ள வானகம் இயற்கை வேளாண் பண்ணைக்கு கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இயற்கை வேளாண்மையின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை, கரூர் வட்டார வேளாண்மை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ், நந்தினி ஆகியோர் செய்திருந்தனர்.