/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி களப்பயணம் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
/
கல்லுாரி களப்பயணம் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : அக் 26, 2025 12:54 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி வட்டார அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி களப்பயணம் நிகழ்ச்சி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. களப்பயணம் நிகழ்ச்சியில், 12 பள்ளிகளில் இருந்து, 372 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
களப்பயணம் நிகழ்ச்சிக்காக, கரூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இளங்கலை, முதுகலை பாடப்பிரிவு பற்றி விரிவாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கல்லுாரி வகுப்பறை, ஆய்வகங்கள், பொது நுாலகம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
படிப்புகள் குறித்த வேலைவாய்ப்புகள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது.
கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட உதவி திட்ட அலுவலர் யோகரத்தினம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, க.பரமத்தி வட்டார வள மைய அறிவழகன், ஆசிரியர் பயிற்றுனர் சரண்யா, கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

