/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான சிலம்பாட்டம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
/
மாநில அளவிலான சிலம்பாட்டம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
மாநில அளவிலான சிலம்பாட்டம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
மாநில அளவிலான சிலம்பாட்டம் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : நவ 04, 2025 01:11 AM
குளித்தலை, மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
குளித்தலை அடுத்த லாலாபேட்டையில், மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வைகைநல்லுார் பஞ்., கோட்டமேடு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியை சேர்ந்த, 20 மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களை, ஆசிரியர்கள் கல்பனா, வைதேகி, சுகன்யா ஆகியோர் அழைத்து சென்றனர். அதில் 7 மாணவர்கள் முதல் பரிசையும், 3 மாணவர் கள் இரண்டாம் பரிசையும், 10 மாணவர்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ. மாணவியரை தலைமை ஆசிரியர் கல்பனா பாராட்டினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், சிலம்பம் மாஸ்டர் வீரமணியை பாராட்டினர்.