/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கூட்டம்
/
குளித்தலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கூட்டம்
குளித்தலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கூட்டம்
குளித்தலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கூட்டம்
ADDED : நவ 04, 2025 01:11 AM
குளித்தலை,  குளித்தலை தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட,  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கூட்டம் நடைபெற்றது.
தாசில்தார் இந்துமதி தலைமை வகித்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்  குறித்து பேசினார். துணை தாசில்தார் நீதிராஜன், தேர்தல் தனி தாசில்தார் ஜெயவேல்காந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, தனி தாசில்தார் ஜெயவேல்காந்தன் விளக்கம் அளித்தார்.
இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக வாக்காளர் பட்டியல் படிவம் கொடுக்க உள்ளனர்.
வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இணைந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கொள்ளலாம் என,வாக்குச்சாவடி முகவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.