/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்
/
கரூர் அருகே நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்
கரூர் அருகே நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்
கரூர் அருகே நாய்கள் இனப்பெருக்கம் அதிகரிப்பு: பீதியில் பொதுமக்கள்
ADDED : நவ 04, 2025 01:12 AM
கரூர்,  கரூர் அருகே, நாய்கள் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
கரூர் மாநகராட்சி, திருச்சி சாலையில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் வளர்ந்து வரும் நகராக உள்ளது. அந்த பகுதியில் உள்ள, ஏராளமான குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், 100 க்கும் மேற்பட்ட நாய்கள் இப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பணிகளை முடித்து, வீடு திரும்பும் பொதுமக்களை நாய்கள் துரத்துகிறது.
குறிப்பாக, டூவீலர்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் அவர்கள் கீழே விழுகின்றனர்.
இதனால், காந்தி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள், நாய்க்கடி பீதியில் உள்ளனர்.
எனவே, வடக்கு மற்றும் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் சுற்றித்திரியும், நாய்களை பிடித்து, வேறு இடத்தில் கொண்டு போய் விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.