/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு டவுன் பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
/
அரசு டவுன் பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
அரசு டவுன் பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
அரசு டவுன் பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தல்
ADDED : டிச 24, 2025 09:25 AM
குளித்தலை: திருச்சி மெயின்கார்ட் கேட்டில் இருந்து, பெட்டவாய்த்தலை வந்து செல்லும் டவுன் பஸ்களை தேவஸ்தானம் ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை வழியாக, ஆரியம்பட்டி, குமாரமங்கலம், மேட்டுமருதுார், புரளி வரை டவுன் பஸ் இயக்கினால் கிராம மக்கள் நகர பகுதிகளுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக இருக்கும்.
இதேபோல், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து குழுமணி, நங்கவரம், பொய்யாமணி, திருச்சாப்பூர், கோட்டையார் தோட்டம் வழியாக குமாரமங்கலம், மேட்டுமருதுார், பரளி, கோட்டைமேடு, குளித்தலை-மணப்பாறை நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில், புதிதாக டவுன் பஸ் இயக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.