/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பஸ்-வேன் மோதல்: டிரைவருக்கு காயம்
/
அரசு பஸ்-வேன் மோதல்: டிரைவருக்கு காயம்
ADDED : மே 07, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிக்கொண்டதில் வேன் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.கரூர் மாவட்டம், திருமுக்கூடலுாரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் வேலுாருக்கு, நேற்று மாலை அரசு டவுன் பஸ் புறப்பட்டது.
அதில், 10 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது, நெரூர் நான்கு சாலையில் வந்த வேன் மீது அரசு பஸ் மோதியது. அதில், வேன் டிரைவரின் கால் சிக்கி கொண்டது. கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சென்று, வேன் டிரைவரை மீட்டனர். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அரசு பஸ்சில் இருந்த, பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால், நெரூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.