ADDED : ஆக 19, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த கடவூர், ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள், 40; இவர்
கடந்த, 17 இரவு, 8:15 மணிக்கு, வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில்
கோழிகள் சத்தம் போட்டதால், அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது,
கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் ஒயரை, மர்ம நபர் ஒருவர்
பிடித்து அறுத்துக்கொண்டிருந்துள்ளார். அதிர்ச்சியடைந்த
பொன்னம்மாள், சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஒயர் திருடனை
பிடித்து, சிந்தாமணிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில்,
தோகைமலை பஞ்., நல்லாகவுண்டம்பட்டியை சேர்ந்த சரவணன், 32, பி.இ.,
மெக்கானிக்கல் படித்துள்ளதும், தற்போது, 'டாட்டா ஏசி' டிரைவராக
இருந்து வருவதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
