ADDED : ஆக 19, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த பிள்ளபாளையம் பஞ்., வல்லம், கொம்பாடிப்பட்டி, பாலப்பட்டி
சாலையின் இருபுறமும், பஞ்., நிர்வாகம் சார்பில், 300க்கும் மேற்பட்ட
மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், வேம்பு, புளியமரம், புங்கன்,
ஈட்டி ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பஞ்., நிர்வாகம் சார்பில்
பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. தற்போது வெயில் கொளுத்தி
வருவதால், மரக்கன்றுகள் கருகும் நிலை ஏற்பட்டது.
இதனால்,
பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம் குடங்களில்
தண்ணீர் பிடித்து, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி நடந்தது.
மேலும், மரக்கன்றுகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணி
மேற்கொள்ளப்பட்டது. பணிகளை பஞ்., நிர்வாகம் பார்வையிட்டது.
