/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உள்ளாட்சி தினத்தையொட்டி கரூரில் கிராம சபை கூட்டம்
/
உள்ளாட்சி தினத்தையொட்டி கரூரில் கிராம சபை கூட்டம்
ADDED : நவ 24, 2024 12:58 AM
உள்ளாட்சி தினத்தையொட்டி
கரூரில் கிராம சபை கூட்டம்
கரூர், நவ. 24-
கரூர் மாவட்டத்தில், உள்ளாட்சிகள் தினத்தை யொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
வெள்ளியணை பஞ்சாயத்து, குமாரபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கலெக்டர் தங்கவேல், திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்.,ல், தலைவர் சாந்தி சேகர் தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், துணைத்தலைவர் சக்திவேல், செயலாளர் விஜயகுமார் உள்பட, பலர் பங்கேற்றனர்.
அதேபோல், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்.,ல் தலைவர் பெரியசாமி தலைமையிலும், காதப்பாறை பஞ்.,ல், தலைவர் கிருபாவதி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.