ADDED : நவ 21, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நவ. 21-
கடந்த, 1 ல் உள்ளாட்சிகள் தினத்தன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த கிராமசபை கூட்டம் நாளை மறுநாள் (23ம் தேதி) நடக்கிறது. பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதித்தல், துாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல் ஜீவன் திட்டம், தீன்தயாள் கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.