/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்
/
கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்
ADDED : அக் 02, 2024 01:58 AM
கரூர் மாவட்டத்தில்
இன்று கிராம சபை கூட்டம்
கரூர், அக். 2-
மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், 157 பஞ்.,களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம், இன்று நடக்கிறது. பஞ்., நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், குழந்தை தொழிலாளர் இல்லாத பஞ்சாயத்துகளாக அறிவித்தல் உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள் கூட்டத்தில் வைக்கப்படவுள்ளன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.