/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
/
நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
நாளை கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர்
ADDED : நவ 07, 2024 01:15 AM
நாளை கூட்டுறவு பணியாளர்கள்
குறைதீர் கூட்டம்: கலெக்டர்
கரூர், நவ. 7-
'கூட்டுறவு சங்கங்களில் பணி
புரியும் ஊழியர்களுக்கு பணியாளர் நாள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழக கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு, இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் நாள் என்ற குறைதீர் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, கரூர் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் பணியாளர் குறைதீர் நாள் கூட்டம் நாளை காலை, 10.30 மணிக்கு நடக்கிறது. பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தின் போது விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்களுக்கு நிகழ்ச்சியின்போதே அல்லது 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து பணியாளர்களும், நிறுவனங்களின் அனைத்து நிலை பணியாளர்கள், ரேஷன் விற்பனையாளர்கள், கட்டுநர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களும் மனு அளிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.