/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.6.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.6.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : நவ 14, 2024 07:13 AM
கரூர்: சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை, 6.25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த, மே, ஜூன் மாதங்களில் கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
இதனால், கரூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கட-லையை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தனர். கரூர், க.பர-மத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை உள்பட ஊராட்சி ஒன்றி-யங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடியாகும் நிலக்கடலையை நொய்யல் அருகே உள்ள சாலைப்புதுார் வேளாண் ஒழுங்கு முறை
விற்-பனை கூடத்தில் விற்பனை செய்கின்றனர். இங்கு வாரந்தோறும் தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்-கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடக்கிறது. ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள்
வாங்கி செல்கின்றனர். நேற்று முன்தினம் நடத்த ஏலத்தில், 267 மூட்டை நிலக்கடலையை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர். கிலோ குறைந்தபட்ச விலையாக 63.69 ரூபாய், அதிகபட்ச விலை-யாக, 78.66 ரூபாய், சராசரி விலையாக, 75.09 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 8,911 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 6 லட்சத்து, 25 ஆயிரத்து 570
ரூபாய்க்கு விற்பனையானது.