/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
/
ரூ.2.31 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ADDED : டிச 18, 2024 01:51 AM
கரூர், :சாலைப்புதுார், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 2.31 லட்சம் ரூபாய்க்கு நிலக்கடலை ஏலம் நடந்தது.
கரூர் மாவட்டத்தில், மழையை நம்பி மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுறது. பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் நிலக்கடலையை சாகுபடி செய்தனர். கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை உள்பட பல இடங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. சாகுபடியாகும் நிலக்கடலை, நொய்யல் அருகே உள்ள சாலைப்புதுார் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடந்த ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 111 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 60.18 ரூபாய், அதிகபட்சமாக, 72.50 ரூபாய், சராசரியாக, 71.20 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 3,735 கிலோ எடையுள்ள நிலக்கடலை, இரண்டு லட்சத்து, 31 ஆயிரத்து, 183 ரூபாய்க்கு விற்பனையானது.