ADDED : அக் 06, 2024 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மிதமான மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மானாவாரி விவசாய நிலங்களில் விவ-சாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, களை எடுக்கும் பணி நடந்தது. தற்போது எள் செடிக-ளுக்கு தேவையான தண்ணீர், மழை நீரால் கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மிதமான மழை பெய்-தது. இந்த மழையால் வாடிய நிலையில் இருந்த எள் செடிகள், பசுமையாக வளர்ந்து பூக்கள் பூத்து வருகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்தால், எள் செடிகள் மூலம் மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் கூறினர்.