/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜி.எஸ்.டி, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
/
ஜி.எஸ்.டி, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ஜி.எஸ்.டி, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ஜி.எஸ்.டி, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 03, 2025 01:07 AM
கரூர், தாட்கோ மூலம், ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்பபயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
தாட்கோ, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி, மற்றும் வருமானவரி தொழில் நுட்ப பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்கு, 21 முதல், 30 வயது வரை இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். பயிற்சியினை www.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு, 55 நாட்கள். சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
இத்தகவலை கலெக்டர்
தங்கவேல் தெரிவித்துள்ளார்.