/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

ADDED : மே 15, 2025 01:52 AM
கரூர்:கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலெக்டர் தங்க வேல் தலைமை வகித்து பேசியதாவது:
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில், உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பாடவாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லுாரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்பு, வங்கி கடன் போன்ற விபரங்களை தலைச்சிறந்த வல்லுனர்களை கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு பேசினார்.
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வமணி, சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரகாசம், மருத்துவக் கல்லுாரி முதல்வர் லோகநாயகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.