/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாஜி வி.சி.க., நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்
/
மாஜி வி.சி.க., நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : ஜன 07, 2025 01:37 AM
மாஜி வி.சி.க., நிர்வாகி
மீது பாய்ந்தது குண்டாஸ்
கரூர், ஜன. 7-
கரூரை சேர்ந்த, மாஜி வி.சி.க., நிர்வாகியை, குண்டர் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.
கரூர் வெங்ககல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா, 42; முன்னாள் திருச்சி மற்றும் கரூர் மண்டல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளர். இவர், டாரஸ் லாரி உரிமையாளர் சேகரை, மிரட்டி பணம் பறித்த வழக்கில் கடந்த டிச., 6ல் வெள்ளியணை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ராஜா மீது மேலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து, ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, கலெக்டர் தங்கவேல், ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள ராஜாவிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, வெள்ளியணை போலீசார் நேற்று வழங்கினர்.