/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'குட்கா' பதுக்கியவர் குண்டாசில் கைது
/
'குட்கா' பதுக்கியவர் குண்டாசில் கைது
ADDED : ஜூலை 10, 2024 06:57 AM
ராசிபுரம்: ராசிபுரம், முல்லா சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சையத் முஸ்தபா, 60.
இவர், கோனேரிப்பட்டி பகுதியில் தனியாக குடோன் எடுத்து, அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். ஆய்வின் போது, ராசிபுரம் போலீசாரால் பிடிபட்டார். சையத் முஸ்தபாவிடம் இருந்து, 25 மூட்டைகளில், 265 கிலோ குட்கா பிடிபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் முஸ்தபாவை கைது செய்தனர். இந்நிலையில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் பரிந்துரைப்படி, கலெக்டர் உமா, சையத் முஸ்தபாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சையத்முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.