ADDED : மே 07, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு வரை, கோடை மழை பெய்தது.
மாயனுார் அருகே ஆலங்கட்டி மழை பெய்தது.தமிழகத்தில், கரூர் மாவட் டத்தில் அதிக பட்சமாக, 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உள்ளது. கடந்த, 4 ல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் இரவு கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் நள்ளிரவு வரை கோடை மழை பெய்தது. மாயனுார் அருகே, முனையனுார் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.மாவட்டத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,) கரூர், 1.2. கிருஷ்ணராயபுரம், 15, மாயனுார், 30.4, கடவூர், 19, பாலவிடுதி, 3, மயிலம்பட்டி, 5 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் சராசரியாக, 6.13 மி.மீ., மழை பதிவானது.