/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வைக்கோல் தீவன புல் விலை உயர்ந்து விற்பனை
/
வைக்கோல் தீவன புல் விலை உயர்ந்து விற்பனை
ADDED : ஆக 09, 2025 01:43 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, வயலுார், வேங்காம்பட்டி, பஞ்சப்பட்டி, கருப்பத்துார், வரகூர், குழந்தைப்பட்டி, இரும்பூதிப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் பசு மாடு, எருமைகளை வளர்த்து வருகின்றனர். இவைகளுக்கு தீவனமாக வைக்கோல் தீவனப்புல் தரப்படுகிறது. இந்த பகுதியில், தற்போது தீவனப்புல் தட்டுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் வைக்கோல் தீவனப்புற்களை விவசாயிகள் வாங்கி பசுக்களுக்கு தருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வைக்கோல் கட்டு, 180 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் கட்ட நெல் சாகுபடி அறுவடை செய்யப்பட்ட நிலையில், தீவனப்புற்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, வைக்கோல் தீவனப்புல் கட்டுகள் லாரிகளில் கொண்டு வந்து விற்கப்பட்டது. ஒரு கட்டு, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தஞ்சாவூர், திருவாரூர் இடங்களில் இருந்து, வைக்கோல் தீவனப்புற்கள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.