/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பத்திர பதிவுத்துறை தலைவர் அரவக்குறிச்சியில் ஆய்வு
/
பத்திர பதிவுத்துறை தலைவர் அரவக்குறிச்சியில் ஆய்வு
ADDED : ஜூன் 21, 2025 01:03 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் உள்ள ரேஷன் கடை, குப்பை கிடங்கு, சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து பதிவுத்துறை தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதில், பள்ளப்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதேபோன்று வேலம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், பொதுமக்களுக்கு தரமான முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
மேலும், அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., முகமது பைசூல், தாசில்தார் மகேந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.