/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுகாதார ஆய்வாளர் தேர்வு இணையதளம் வழியாக பயிற்சி வகுப்பு: கலெக்டர்
/
சுகாதார ஆய்வாளர் தேர்வு இணையதளம் வழியாக பயிற்சி வகுப்பு: கலெக்டர்
சுகாதார ஆய்வாளர் தேர்வு இணையதளம் வழியாக பயிற்சி வகுப்பு: கலெக்டர்
சுகாதார ஆய்வாளர் தேர்வு இணையதளம் வழியாக பயிற்சி வகுப்பு: கலெக்டர்
ADDED : நவ 20, 2025 02:04 AM
கரூர், சுகாதார ஆய்வாளர் தேர்வுக்கான, இணையதள பயிற்சி வகுப்புக்கு, கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் வெண்ணைமலையில் உள்ள, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. அதில், தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின், 1,429 சுகாதார ஆய்வாளர் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கான இணைய வழியில், மண்டல அளவில் இலவச பயிற்சி வகுப்பு, இம்மாதம் கடைசி வாரத்தில் நடத்தப்படவுள்ளது.
பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் சேர, 2 புகைப்படம், ஆதார்அட்டை நகலுடன் நாளை (21ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04324 -223555, 63830 50010, 94990 55912 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.