ADDED : ஜூலை 08, 2026 05:16 AM
கிருஷ்ணராயபுரம்:கள்ளப்பள்ளி பஞ்சாயத்து பகுதி யில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம்
அடுத்த கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, லாலாப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ்
வங்கி தெரு பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் தீவிர கொசு
ஒழிப்பு பணி முகாம் நடந்தது. மழை காலத்தை முன்னிட்டு, கொசுக்கள் மூலம்
பரவும் காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மஸ்துார் பணியாளர்கள், பழைய கழிவு பொருட்களை அகற்றுதல், கழிவுநீர்
தேங்காமல் இருக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல், பழைய
பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், கொட்டங்குச்சி அகற்றுதல், நல்ல
குடிநீரை மூடி வைத்தல், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் பிளீச்சிங்
பவுடர் தெளித்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆகிய பணிகளில்ஈடுபட்டனர்.
