ADDED : ஜூலை 08, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி
அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி போலீசார் சவுந்தராபுரம்
பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, திண்டுக்கல்
மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன்
சின்னராஜ், 42, மற்றும் அரவக்குறிச்சி அருகே உள்ள வால்நாயக்கனுார்
பகுதியை சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவரும், சட்ட விரோதமாக மது விற்றது
தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்ய முற்பட்டபோது,
லோகநாதன் தப்பினார். சின்னராஜை கைது செய்து, 1,000 ரூபாய் மதிப்புள்ள,
6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
