தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கொளுத்தும் வெயில்: இளநீர் விலை உயர்வு

கொளுத்தும் வெயில்: இளநீர் விலை உயர்வு

கொளுத்தும் வெயில்: இளநீர் விலை உயர்வு


ADDED : அக் 12, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்:கரூரில், கோடையைபோல் வெயில் கொளுத்துவதால், இளநீர் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் காவிரியாற்று பகுதிகள் மற்றும் அமராவதி ஆற்றுப் பகுதிகளின் கரையோர பகுதிகளில், மட்டும் தென்னை விவசாயம் நடக்கிறது. இதனால், இளநீர் சாகுபடி குறைந்தது. கரூர் மாவட்ட இளநீர் தேவைக்கு, திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை பேட்டை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கரூரில் கடந்த சில நாட்களாக, கோடையை போல், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மேலும், இளநீர் வரத்து குறைவால் கடந்த மாதம், 30 ரூபாய் வரை விற்ற ஒரு இளநீர் தற்போது, 40 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, இளநீர் வியாபாரிகள் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடையை போல், வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், பொதுமக்கள் இளநீரை விரும்பி அருந்துகின்றனர். மேலும், கரூர் மாவட்டத்தில், 70 சதவீதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால், வெளி மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று இளநீரை கொள்முதல் செய்து, கொண்டு வருகிறோம். வரத்து குறைவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us