/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுமைப்பணி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
சுமைப்பணி தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 21, 2025 07:59 AM
கரூர்: கரூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின், 14வது ஆண்டு பேரவை கூட்டம், சங்க அலுவலகத்தில் தலைவர் விநாயகம் தலைமையில் நடந்தது. அதில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி வாரியம் அமைக்க வேண்டும். டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் அனைவருக்கும், பி.எப்., - இ.எஸ்.ஐ., வசதி, அடையாள அட்டை, சீருடை வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத குடும்பங்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீடு கட்ட நான்கு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் பிச்சைமுத்து, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் ராஜா முகமது, சுப்பிரமணியன், தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி, சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.