ADDED : அக் 29, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.
மோந்தா புயல் காரணமாக, தமிழகம் முழுவதும், பரவலாக மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
இருப்பினும், கரூர் மாவட்டத்திலும் கடந்த, சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலை, 4:00 முதல், 4.30 மணி வரை கரூர் டவுன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது.

